நயினார் நகேந்திரன் சொன்ன ஒற்றை வார்த்தை! அலறும் ஆளுங்கட்சி!

Published : Jun 05, 2025, 03:29 PM IST
nainar nagendran

சுருக்கம்

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் விமர்சித்தார்.

பெங்களூரு சம்பவம் ஆழ்ந்த இரங்கல்

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பேட்டியளிக்கையில்: பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்களின் மகள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதில், ஒருவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் என்பது மிகவும் வருத்தம் வேதனைக்கு உரிய செய்தி.

தமிகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை

பெங்களூரில் இந்த இந்த நிகழ்விற்கு சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் இருந்தது தான் உயிரிழப்பிற்கு காரணம். மகாராட்டிரா மாநிலத்தில் கடந்த காலங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது பாஜக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பாக நடத்தி இருக்க வேண்டிய நிகழ்வை சரியாக கர்நாடகா அரசு செய்யவில்லை. தமிகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கின்றது. திமுக ஆட்சி இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. அதுவரை விவசாயிகளிக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பாமக உட்கட்சி பிரச்சினை

பாட்டாளி மக்கள் கட்சியில் நடப்பது உட்கட்சி பிரச்சினை. குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சென்று இருப்பது தனிப்பட்ட முறையில், பாஜகவிற்கும் அதற்கும் தொடர்பு இல்லை. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கைதானவர்கள் 19 கொலைகள் செய்து இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்து இருக்கின்றனர். ஏற்கனவே கைதாகி இருப்பவர்கள் நிரபராதிகளா? தவறே செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களா? மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தான் அமித்ஷா வருகின்றார்.

விஜய்க்கு அழைப்பு

முருக பக்தர் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் இருந்து திமுக அரசை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு, தவெக தலைவர் விஜய்க்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என நயினார் நகேந்திரன் தெரிவித்தார். விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது ஆளுங்கட்சியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!