Sekar Reddy: சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு திடீர் மாரடைப்பு..! எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை

Published : Dec 20, 2022, 10:36 AM ISTUpdated : Dec 20, 2022, 04:56 PM IST
Sekar Reddy: சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு திடீர் மாரடைப்பு..! எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை

சுருக்கம்

தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தான சென்னை மண்டல ஆலோசனை குழு தலைவரான சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு நெஞ்சு வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேகர் ரெட்டி மருமகனுக்கு மாரடைப்பு

பிரபல தொழிலதிபரான சேகர் ரெட்டி தனது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மகன் சந்திரமவுலிக்கும் திருமணம் நிச்சயம் செய்தார். இவர்களின் திருமண நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடைபெற்றது.  இதனையடுத்து அடுத்த மாதம் திருமண நடைபெறவுள்ள நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரந்தூர் விமான நிலைய திட்டம்..! பின்வாங்குகிறதா தமிழக அரசு..? போராட்ட குழுவோடு அமைச்சர் குழு அவசர ஆலோசனை

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்த நிலையில் நேற்று முன் தினம் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனான  சந்திர மௌலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திர மெளலியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சந்திரமௌலி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். "சிபிஆர் (இதய நுரையீரல் புத்துயிர்) உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் ECMO (எக்ஸ்ட்ராகார்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம்) தொடங்கப்பட்டது. தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் சந்திர மெளலியை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பலதரப்பட்ட குழுவால் தொடர்ந்து கண்காணிக்படுவதாக  மருத்துவமனை அறிக்கை கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வாட்ச் பில்லை வெளியிட அண்ணாமலை தயங்குவது ஏன்.? கர்நாடக காபி கடை உரிமையாளர் பெயரில் ரசீதா.? திமுக கேள்வி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி