ஓட்டுநரை அடித்தவரை கைது செய்யக் கோரி திடீர் வேலை நிறுத்தம்…

 
Published : Oct 13, 2016, 12:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ஓட்டுநரை அடித்தவரை கைது செய்யக் கோரி திடீர் வேலை நிறுத்தம்…

சுருக்கம்

கோவையில் ஓட்டுநரைத் அடித்தவரை கைது செய்யக்கோரி அரசு பேருந்து ஓட்டுநர– நடத்துநர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் செல்வக்குமார் (31). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். திங்கள்கிழமை இவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகருக்கு அரசு நகர பேருந்தை ஓட்டிச் சென்றார்.

அந்த பேருந்து சேரன்மாநகர் அருகே சென்றபோது சேரன்மாநகரை சேர்ந்த திருமலைநம்பி (33), சுப்பிரமணியம் (43) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பேருந்தை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது பேருந்தை ஓட்டிச் சென்ற செல்வக்குமார் பிரேக் போட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செல்வக்குமார் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த திருமலைநம்பி, சுப்பிரமணியம் ஆகியோர் சேர்ந்து செல்வக்குமார், கண்டக்டர் சாய்குமார் ஆகியோருடன் வாக்குவாதம் செய்து நால்வரும் அடித்துக் கொண்டனர். இதில், காயம் அடைந்த அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதுபோன்று திருமலைநம்பி, சுப்பிரமணியம் ஆகியோரும் காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்ந்தனர். இது குறித்து அரசு நகர பேருந்து டிரைவர் செல்வக்குமார் பீளமேடு காவல்துறையினர் புகார் செய்தார். ஆனால், காவல்துறையினர் இந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுங்கம் பணிமனையில் திரண்டனர். அவர்கள், செல்வக்குமாரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திடீரென்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் வரை பேருந்துகளை இயக்கப் போவதில்லை என்று முழக்கங்கள் எழுப்பினார்கள்.

இதனால் அந்த பணிமனையில் உள்ள 203 நகர பேருந்துகள் இயங்கப்பட வில்லை. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து கழக பொதுமேலாளர் கோவிந்தன், மாநகர காவல்துறை துணை கமிஷனர் லட்சுமி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதுபோன்று அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ.யும் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

டிரைவரை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு, பேருந்துகளை இயக்கினார்கள். இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை 3 மணி நேரம் நகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அதிகாலை நேரத்தில் பயணிகள் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே, டிரைவர் செல்வக்குமாரை தாக்கிய திருமலைநம்பி, சுப்பிரமணியம் ஆகியோர் மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருமலைநம்பி கைது செய்யப்பட்டார்.

அதுபோன்று திருமலைநம்பி கொடுத்த புகாரின்பேரில் டிரைவர் செல்வக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!