மொபைட் மீது மோதிய அரசு பேருந்து... ஒருவர் உயிரிழப்பு (வீடியோ...)

 
Published : May 14, 2018, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
மொபைட் மீது மோதிய அரசு பேருந்து... ஒருவர் உயிரிழப்பு (வீடியோ...)

சுருக்கம்

Bus collided with bus collision - One person killed

அரசு பேருந்து மோதி ஓய்வுபெற்ற கப்பல் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.

ஓய்வு பெற்ற கப்பல் ஊழியரான ஜெயபாலன் (75) தூத்துக்கடி மில்லர்புரம் மேற்குபகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் அருகே உள்ள குறுகிய சாலையில், மொபைட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.

அப்போது, மொபைட் மீது, அரசு பேருந்து உரசியது. இதில் நிலை தடுமாறிய ஜெயபாலன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலன், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தென்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்துக்கு காரணம், மோசமான சாலையே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குண்டும் குழியுமாக சாலை உள்ளதால் அடிக்கடி
இதுபோன்ற விபத்துக்ள் ஏற்படுவதாகவும், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
ஆம்னி பேருந்து ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து தொங்கிய பேருந்து.. தூக்கித்தில் இருந்த 40 பயணிகளின் நிலை என்ன?