லலிதா அக்காகிட்ட சரக்கடிக்க “கிளாஸ்-வாட்டர்” கேட்ட வாலிபர்... உருட்டுக்கட்டையால் செம்ம காட்டு காட்டிய அம்மா மகன்!

 
Published : May 14, 2018, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
லலிதா அக்காகிட்ட சரக்கடிக்க “கிளாஸ்-வாட்டர்” கேட்ட வாலிபர்... உருட்டுக்கட்டையால் செம்ம காட்டு காட்டிய அம்மா மகன்!

சுருக்கம்

A young man who was drinking alcohol near Arakonam

சரக்கு அடிக்க “கிளாஸ்” கேட்ட இளைஞரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகே உள்ள உளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தன்ராஜ் என்கிற ராஜ்குமார். 20 வயதான இவர், மது அருந்தும் உள்ளது. இவர் தினமும் இரவு நேரத்தில் மது அருந்துவதை வழக்கமாகவும் வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை என்றதால் காலையிலிருந்தே மப்பில் இருந்துள்ளார். நேற்று மாலையும் இனஊம் சரக்கை அதிகப்படுத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்றிரவும் மது போதையில் இருந்துள்ளார்.  அந்த போதை பத்தாமல் மேலும் சரக்கு அடிக்க நினைத்த  அவர்.

உளியம்பாக்கம் அருகேயுள்ள கீழாந்தூர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது வாங்கிக் கொண்டார். அதனை அருந்துவதற்காக, அருகிலுள்ள ஒரு லலிதா என்கிற ஜெயலலிதா என்ற பெண்ணிடம் வீட்டிற்கு சென்று சரக்கு அடிக்க “டம்ளர்” வேண்டும் கூடவே தண்ணீரும் தரும்படி கேட்டார். ஆனால் ஜெயலலிதா தர முடியாது என சொல்லிவிட்டார். தண்ணீர் தர மறுத்ததால் ஏற்கனவே போதையில் இருந்த ராஜ்குமார் தண்ணீர் கிளாஸ் கேட்டு அசிங்கமாக பேசியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதாவும் அவரது மகன் சுதாகரும் உருட்டைகட்டையை எடுத்து வைத்து ராஜ்குமாரை சராமாரியாக வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் அங்கேயே மயங்கி சரிந்து விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடனடி சிகிச்சை முடிந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டும், ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார், ஜெயலலிதா மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!