நேருக்கு நேர் மோதி கொண்ட அரசு பஸ் - லாரி : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

 
Published : May 05, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
நேருக்கு நேர் மோதி கொண்ட அரசு பஸ் - லாரி : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

சுருக்கம்

bus accident killed 5 near dindigul

திண்டுக்கல் அருகே அரசு பேருந்துடன் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து அரசு பேருந்து ஒன்று 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த பேருந்து மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள்கோவில் பட்டி என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்தக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் பேர் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பெருமாள்கோவில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு