அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து !! சென்னை ராஜாஜி சாலையில் நள்ளிரவு பயங்கரம் !!!

 
Published : Nov 08, 2017, 06:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து !! சென்னை ராஜாஜி சாலையில் நள்ளிரவு பயங்கரம் !!!

சுருக்கம்

building colloped in chennai

சென்னை  ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மெரியன் கிளப் கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. கட்டடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பல இடங்களில் பழைய குடியிருப்புகள், கட்டடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகின்றன. இவற்றை பராமரிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ தமிழக அரசு தவறிவிட்டதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

இந்த கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது மெரியன் கிளப் கட்டடம். இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

இந்த கட்டடம் நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்து  விபத்துக்குள்ளானது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர்.கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

 

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு