பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்…

 
Published : Nov 13, 2016, 01:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்…

சுருக்கம்

பனப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் அருகே வீட்டில் தனியாக வசித்த விதவை பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பெண்ணுறுப்பில் கத்தியை சொருகி கொடூரமான முறையில் செய்யப்பட்டுக் கிடந்தார். கொலை செய்யப்பட்டுள்ளார்.

காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி அருகே உள்ள சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (55). இவரது கணவர் ஏகாம்பரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்தபின் கன்னியம்மாள் வீட்டு முன்புறம் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இவரது வீடு சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. வீட்டு முன் பெரிய அளவில் இடம் உள்ளது. வெளியூருக்கு செல்பவர்கள் தங்கள் வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு செல்வர். அந்த வாகனங்களை பாதுகாப்பதற்கு கன்னியம்மாளிடம் வாகன உரிமையாளர்கள் கட்டணமும் செலுத்துவர்.

வியாழக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் வீட்டை பூட்டிவிட்டு கன்னியம்மாள் தூங்கினார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வெளியூர் செல்பவர்கள் தங்கள் வாகனத்தை இவரது வீட்டு முன் நிறுத்துவதற்காக வந்தபோது கன்னியம்மாளின் வீடு திறந்து கிடந்தது. உள்ளே பார்த்தபோது நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அவளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவேரிப்பாக்கம் காவல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் அவளூர் காவலாளர்கள் அங்கு விரைந்து வந்து கன்னியம்மாளின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கன்னியம்மாளின் உடல் முழுவதும் இரத்தக்கறை இருந்தது. அவரது பெண்ணுறுப்பிலும் கத்தி சொருகப்பட்டுள்ளது

எனவே அவரை காமவெறி பிடித்த கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என காவலாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து துப்பு துலக்குவதற்காக காவல் மோப்பநாய் ஜான் வரவழைக்கப்பட்டது.

கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்தவாறு வெளியே ஓடிய நாய் ஏதையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே கொலையாளிகள் அந்த இடத்திலிருந்து வாகனம் மூலம் தப்பியிருக்கலாம் என கருதினர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு பகலவன் மற்றும் அரக்கோணம் மதுவிலக்கு பிரிவு காவல் துணை சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க காவேரிப்பாக்கம் காவல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட கன்னியம்மாளுக்கு சாந்தி என்ற மகள் உள்ளார். அவர் வாலாஜாவை அடுத்த ஒழுகூரில் கணவர் காத்தவராயனுடன் வசித்து வருகிறார்.

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பனப்பாக்கம் பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!