தங்கையை கற்பழித்தவரை வெட்டிக் கொன்ற சகோதரர்கள்; தண்டனை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் ஆத்திரம்...

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 31, 2018, 11:49 AM IST

இராமநாதபுரத்தில் பிளஸ் -2  மாணவியை கற்பழித்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தவர், சாட்சிகளை மிரட்டி உள்ளார். இதனால் தங்கையை கற்பழித்தவனுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அவரை வெட்டிக் கொன்றுள்ளனர் மாணவியின் சகோதரர்கள்.
 


இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் பிளஸ் -2  மாணவியை கற்பழித்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தவர், சாட்சிகளை மிரட்டி உள்ளார். இதனால் தங்கையை கற்பழித்தவனுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அவரை வெட்டிக் கொன்றுள்ளனர் மாணவியின் சகோதரர்கள்.

Tap to resize

Latest Videos

undefined

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் வசிக்கும் 17 வயது பிளஸ்-2 படிக்கும் மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதே ஊரில் வசிக்கும் காளிமுத்து. சித்ரா வீட்டில் தனியாக இருக்கிறார் என்பதை அறிந்த காளிமுத்து வீட்டுக்குள் புகுந்து சித்ராவை கற்பழித்துவிட்டார். பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். 

இதுகுறித்து அறிந்த சித்ராவின் உறவினர்கள் கடலாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரின்பேரில் வழக்குப் பதிந்த காவலாளர்கள் தலைமறைவாக இருந்த காளிமுத்துவை கைது செய்தனர்.  

கடந்த 2016 அக்டோபர் 31-ஆம் தேதி  நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் வழக்கு விசாரணை முடியவில்லை.

ஆனால், காளிமுத்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், காளிமுத்து தனக்கு எதிரான சாட்சிகளை மிரட்டி நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வராதபடி செய்துவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் காளிமுத்து வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். 

இதுகுறித்து தகவலறிந்து கடலாடி காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று காளிமுத்துவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில், "தனது கணவன் காளிமுத்துவை வெட்டிக் கொலை செய்தது கற்பழிக்கப்பட்ட சித்ராவின் சகோதரர் செல்லமுத்து மற்றும் திருமுருகன் தான்" என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் காளிமுத்து மனைவி அரியநாச்சி.

இப்புகாரின்பேரில் சித்ராவின் சகோதரர் செல்லமுத்துவை காவலாளர்கள் கைது செய்தனர். தங்கையை கற்பழித்தவனுகு தண்டனை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு சகோதரன் திருமுருகனை காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

click me!