எகிறும் கொரோனா..கட்டுப்பாடுகளுடன் புத்தக கண்காட்சி நடத்தப்படுமா..? விடுக்கப்படும் கோரிக்கை..

Published : Jan 20, 2022, 08:55 PM IST
எகிறும் கொரோனா..கட்டுப்பாடுகளுடன் புத்தக கண்காட்சி நடத்தப்படுமா..? விடுக்கப்படும் கோரிக்கை..

சுருக்கம்

சென்னை புத்தகக் கண்காட்சி நடத்த விதிகளை உருவாக்கி கொடுத்தால், பின்பற்ற தயாராக இருப்பதாகவும், புத்தகக் கண்காட்சி நடத்தும் பபாசி நிர்வாகிகள் கூறுகின்றனர்.புத்தகக் கண்காட்சி தள்ளிப்போயிருப்பது, தங்களைக் கடும் நெருக்கடியில் தள்ளியிருப்பதாக பதிப்பாளர்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.  

சென்னை புத்தகக் கண்காட்சி நடத்த விதிகளை உருவாக்கி கொடுத்தால், பின்பற்ற தயாராக இருப்பதாகவும், புத்தகக் கண்காட்சி நடத்தும் பபாசி நிர்வாகிகள் கூறுகின்றனர்.புத்தகக் கண்காட்சி தள்ளிப்போயிருப்பது, தங்களைக் கடும் நெருக்கடியில் தள்ளியிருப்பதாக பதிப்பாளர்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடத்தபட்டுவருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களுக்கும் ஏற்றவகையில் புத்தகங்கள் தள்ளுபடி முறையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படும். சென்னையில் நடைபெறும் இந்த கண்காட்சி பொதுமக்களிடையேயும் புத்தக வாசிப்பாளர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்காட்சிக்கு வந்து பயனடைவது வழக்கம். பட்டிமன்றம், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படும். 

சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் கூட வாசகர்கள் வருவது வழக்கம். இந்தாண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டிருந்த 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி நந்தனம் ஒஎம்சிஏ மைதானத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஜனவரி 23 தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார் என்று புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்தது.

இச்சூழலில் கொரோனா பரவல் காரணமாக புத்தக கண்காட்சி தள்ளி வைக்கப்பட்டது. இதனால், புத்தகக் கண்காட்சியையொட்டி, புதிய புத்தகங்களை வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பதிப்பாளர்கள், கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.மேலும், புத்தகக் கண்காட்சிக்கு 800 அரங்குகள் அமைப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பும் பறிபோயுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், கொரோனா பரவல் குறைந்தப்பின், புத்தகக் கண்காட்சி நடத்த அனுமதி கிடைக்கும் என்று பதிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். 

புத்தகக் கண்காட்சி தள்ளிப்போனாலும், நூலகங்களுக்கு அரசு புத்தகங்களை கொள்முதல் செய்தால், தற்காலிகமாக தங்கள் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதும் பதிப்பாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. மேலும், புத்தகக் கண்காட்சி நடத்த விதிகளை உருவாக்கி கொடுத்தால், பின்பற்ற தயாராக இருப்பதாகவும், புத்தகக் கண்காட்சி நடத்தும் பபாசி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!