“அமைதியான ஓய்வில் இரு எனதன்பே...” உருக்கமான பதிவிட்ட ஸ்ரீதேவி கணவர்! இதோ முழுமையான கடிதம்

 
Published : Mar 01, 2018, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
“அமைதியான ஓய்வில் இரு எனதன்பே...” உருக்கமான  பதிவிட்ட ஸ்ரீதேவி கணவர்! இதோ முழுமையான கடிதம்

சுருக்கம்

Boney Kapoor letter Sridevi my love was axis around which our family ran

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் இருந்து அவரது கணவர் போனி கபூர் ட்விட் போட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு மும்பை கொண்டு வரப்பட்டு நேற்று மாலை மகாராஷ்டிரா அரசு மரியாதியுடன் மூவர்ணக் கோடி போர்த்தப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு. இந்நிலையில், மறைந்த தன்னுடடைய மனைவி ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் இருந்து அவரது கணவர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது; “ஒரு நண்பனை இழந்து விட்டேன். என் மனைவியாகவும் இரண்டு மகள்களுக்குத் தாயாகவும் இருந்த ஸ்ரீதேவியை இழந்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என்னுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடன் பணிபுரிபவர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் ஸ்ரீதேவியின் எண்ணிலடங்கா ரசிகர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் கொண்டிருக்கிறேன். அர்ஜுன் மற்றும் அனுசுலா எனக்கு உறுதுணையாகவும், குஷி மற்றும் ஜான்வி என்னுடைய தூண்களாகவும் இருப்பதால் இந்தத் துயரத்திலிருந்து மீள முயற்சிக்கிறேன்.

என் உலகுக்கு அவர் அமைதியின் சொரூபமாக இருந்தார். இந்த உலகுக்கு அவர் நடிகையாக இருந்தாலும், என் அன்பிற்குரியராகவும், என் குழந்தைகளுக்கு தாயாகவும் என் நண்பராகவும் நல்ல துணையாகவும் இருந்தார். அவரின் இரண்டு மகள்களின் வாழ்க்கைக்கு அனைத்துமாக இருந்தார்.

எங்கள் குடும்பத்தின் அச்சாணியாக இருந்தார். என் அன்பான மனைவி என்னிடம் விடை பெற்றுக்கொண்டதும் குஷி மற்றும் ஜான்வி அவர்களின் தாய்மாமன்களிடம் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், தனிப்பட்ட முறையில் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியத்தைத் தயவுசெய்து மதிக்கவும். நீங்கள் ஸ்ரீதேவி பற்றி ஒவ்வொரு முறை பேசும் போதும் அவரின் நினைவுகள் உங்களை எங்களோடு இணைக்கும்.

தன்னுடைய இடத்தை வேறொரு நபரால் இணைக்க முடியாத அளவுக்கு அவர் இருந்தார். அன்பால் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரம் இது.
திரைச்சீலைகள் ஒரு நடிகையின் வாழ்க்கையில் ஒரு போதும் இறங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் எப்போதும் வெள்ளித் திரையில் பிரகாசிப்பவர்கள்.

இந்த நேரத்தில் எனக்கு ஒரே கவலை. எனது மகள்களைப் பாதுகாப்பதோடு ஸ்ரீதேவி இல்லாமல் முன்னோக்கி நகர்வதற்கு வழியைக் காண்கிறேன். அவள் எங்கள் வாழ்க்கையாகவும், எங்களின் வலிமையாகவும் மற்றும் எங்கள் புன்னகைக்குக் காரணமாகவும் இருக்கிறாள். நாங்கள் அவளுடன் பின்னிப்பிணைந்த உறவை நேசித்தோம்.

அமைதியான ஓய்வில் இரு எனதன்பே... உன் வாழ்வு மீண்டும் ஒருபோதும் மாறாது...” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் போனி கபூர்.

PREV
click me!

Recommended Stories

எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!
காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக