CM MK Stalin: பரபரப்பு.. முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர விசாரணை..

Published : Feb 05, 2022, 06:51 PM IST
CM MK Stalin: பரபரப்பு.. முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர விசாரணை..

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடி குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்

இந்த சோதனையின் போது வெடிகுண்டு எதுவும் இல்லை என போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!