பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு..! பெற்றோர்கள் தவிப்பு..!

 
Published : Nov 10, 2017, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு..! பெற்றோர்கள் தவிப்பு..!

சுருக்கம்

bomb threat to 2 schools in madurai

மதுரையில் தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சிம்மக்கல் வைகை ஆற்றின் கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாத பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது. மேலும் போலீசாரிடம் புகார் அளித்தது.  

இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த பள்ளிக்கு மர்மநபர்கள் பொய்யாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேபோல, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது. இதையடுத்து இந்த பள்ளியிலும் மோப்ப நாயின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் குழந்தைகளின் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு