உடல் முழுக்க வெட்டுக் காயங்களுடன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு - தேனியில் பரபரப்பு...

 
Published : Jan 18, 2018, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
உடல் முழுக்க வெட்டுக் காயங்களுடன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு - தேனியில் பரபரப்பு...

சுருக்கம்

Body found to be full of neck injuries - Find teeth in honey ...

தேனி

தூத்துக்குடியில், உடல் முழுக்க வெட்டுக் காயங்களுடன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேனியில் அவரது ஊரில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகேயுள்ள வெம்பூர் கிராமத்தின் சாலையோர புதர் பகுதியில் சரமாரியான வெட்டுக் காயங்களுடன் கழுத்து அறுபட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடக்கிறது என்ற தகவல் நேற்று காவலாளர்களுக்கு கிடைத்தது.

அந்த தகவலின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், மாசார்பட்டி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, காவலாளர்கள் சென்று சடலம் கிடந்த இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்,  கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த பெரிய கருப்பன் மகன் அருண்பாண்டி (27) என்பதும்,  கோயம்புத்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்துவந்ததும் தெரியவந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை தனது பெற்றோரிடம் தூத்துக்குடி செல்வதாகக் கூறிவிட்டு வந்துள்ள இவர்,  இரவு 8.30 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், நேற்று காலை எட்டயபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்

அருண்பாண்டி எப்படி இறந்தார்? என்ன நடந்தது? என்பதை கண்டுபிடிக்க மாசார்பட்டி காவலாளர்கள் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!