என்ன கொடுமை சார்; மாட்டுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட மருத்துவர்;

 
Published : Apr 07, 2017, 10:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
என்ன கொடுமை சார்; மாட்டுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட மருத்துவர்;

சுருக்கம்

Bloody hell sir The doctor asked for a bribe of Rs 2 lakh for Matt to deliver a death certificate

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காப்பீட்டுத் தொகை பெற வேண்டி, இறந்த மாட்டு இறப்புச் சான்றிதழ் வாங்க சென்ற விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட கால்நடை மருத்துவரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் தள்ளினர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சம்பத் (40). இவர் தனது வீட்டில் சொந்தமாக சில மாடுகளை வளர்க்கிறார். அவற்றில் ஒரு பசு மாட்டை ரூ.30 ஆயிரத்துக்கு காப்பீடு செய்திருந்தார்.

கடந்த மாதம் 30–ஆம் தேதி அந்த பசுமாடு இறந்தது. இதனால், சம்பத் காப்பீடுத் தொகை பெறுவதற்காக இறந்த பசுமாட்டிற்கு இறப்பு சான்றிதழ் வேண்டி தானிப்பாடியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஜலகண்டேஸ்வரன் (47) இறந்த பசு மாட்டிற்கு இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு சம்பத், தன்னால் ரூ.3 ஆயிரம் அதிகமாக இருக்கிறது என்றதும் ரூ.2 ஆயிரம் தந்தால் உடனடியாக இறப்புச் சான்றிதழ் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

லஞ்சம் கொடுக்க மனமில்லாத சம்பத் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்தார்.

வேலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலாளர்கள் சம்பத்தை அழைத்துச் விசாரித்தனர்.

பின்னர், சம்பத் கையில் ரசாயனம் தடவிய ரூ.500 நோட்டுகள் 4 என ரூ.2 ஆயிரம் கொடுத்து மருத்துவர் ஜலகண்டேஸ்வரனிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை 11 மணியளவில் தானிப்பாடி கால்நடை மருத்துவமனைக்கு சம்பத் சென்று அங்கிருந்த ஜலகண்டேஸ்வரனிடம் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார்.

மருத்துவர் ஜலகண்டேஸ்வரன் பணத்தை பெற்றபோது மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்கள் அவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த கால்நடை துறை உதவி இயக்குனர் சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும், கால்நடை துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மருத்துவர் ஜலகண்டேஸ்வரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி இயக்குனர் சந்திரன் தெரிவித்தார்.

பின்னர், லஞ்ச ஒழிப்புதுறை காவலாளர்கள், மருத்துவர் ஜலகண்டேஸ்வரனை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஒப்படைத்து வேலூர் ஆண்கள் சிறையில் தள்ளினர்.

PREV
click me!

Recommended Stories

ஆம்னி பேருந்து ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து தொங்கிய பேருந்து.. தூக்கித்தில் இருந்த 40 பயணிகளின் நிலை என்ன?
மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!