மோடிக்கு ரத்ததானம்..! மது குடிப்போர் சங்கம் அதிரடி..!

Asianet News Tamil  
Published : Apr 14, 2017, 05:03 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
மோடிக்கு ரத்ததானம்..! மது குடிப்போர் சங்கம் அதிரடி..!

சுருக்கம்

blood doantion for modi

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு  சங்கம்  விவசாயிகளுக்கு ஆதரவாக  மோடிக்கு  ரத்த தானம்   செய்யும் போராட்டத்தில்  ஈடுபட உள்ளதாக  தெரிவித்துள்ளது .

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்றுடன் 32  ஆவது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக,  தமிழகம் முழுவதும் ஆங்காங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமானது வரும் 19 ஆம் தேதி, ரத்ததானம் செய்யப்பட்டு அதனை ஒரு பாட்டிலில் அடைத்து, பிரதமர் மோடிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு மது குடிப்போர்  விழிப்புணர்வு சங்கத்தலைவர்  செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் வரை இது போன்ற தொடர்  போராட்டம் நடைப்பெறும் என்றும், பிரதமர் உடனடியாக இந்த பிரச்னை குறித்து தீர்வு காண விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் அமைப்பு செயல்படும் எனவும்  தெரிவித்துள்ளனர் 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!