12 மணி நேரமாக தொடரும் மெகா ரெய்டு...இதுவரை சிக்கியது எவ்வளவு?

 
Published : Jul 16, 2018, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
12 மணி நேரமாக தொடரும் மெகா ரெய்டு...இதுவரை சிக்கியது எவ்வளவு?

சுருக்கம்

Black money confiscated from it raid

அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் “ஆபரேஷன் பார்க்கிங் மணி” என்ற பெயரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரெய்டின் பின்னணியில் கார்கள்தான் குறியாக உள்ளதாம்.

அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் சென்னை அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.

இந்த சோதனையில் இதுவரை கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் சென்னையில் உள்ள அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூரில் 81 கிலோவும் தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பதுக்கப்பட்ட பல கார்கள் திடீரென மாயமாகியுள்ளதால் அவற்றை பிடிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!