டாஸ்மாக் கடைக்கு எதிராக களமிறங்கிய பாஜக...!!! – சட்டசபையை முற்றுகையிட முயற்சி...

First Published Jun 15, 2017, 12:53 PM IST
Highlights
BJP to field against liquor shop towards the chief secretariat


தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாஜகவினர் தலைமை செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து வந்தன. அதற்கு காரணம் பெரும்பாலும் ஓட்டுனர்கள் நெடுஞ்ச்லைகளில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே என்று போலீசார் தரப்பில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 500மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி அரசும் நெடுஞ்சாலைகளில் உள்ள 500 டாஸ்மாக்கை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.

அதன்படி டாஸ்மாக் அகற்றப்பட்டு, வேறு சில கிராமங்களில் வைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்காங்கே டாஸ்மாக் கடைகளை சூறையாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாஜகவினர் தலைமை செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், முரளிதராவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முரளிதராவ், தமிழ்நாடு தற்போது டாஸ்மாக் நாடாக மாறியுள்ளது எனவும், தமிழகத்திற்கு டாஸ்மாக் தேவை இல்லை, பசும்பால்தான் தேவை எனவும் தெரிவித்தார்.

மேலும் ஸ்டாலினுக்கு மாட்டிறைச்சி தேவைப்படுகிறது எனவும் ஆனால் எங்களுக்கு மாட்டுப் பால் தான் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

click me!