நீரிழிவு சிகிச்சைக்கான மருந்தை தேங்காய் நீரின் மூலம் கண்டுபிடித்த பொள்ளாச்சி விவேகானந்தனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்
நீரிழிவு மற்றும் உடல் தீக்காயங்களால் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தை கண்டுபிடித்ததற்காக பொள்ளாச்சியைச் சேர்ந்த விவேகானந்தனுக்கு பாராட்டு தெரிவித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில், நீரிழிவு சிகிச்சைக்கான மருந்தை தேங்காய் நீரின் மூலம் கண்டுபிடித்த பொள்ளாச்சி விவேகானந்தனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நீரிழிவு மற்றும் உடல் தீக்காயங்களால் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சையளிப்பதற்கான பயோ-செல்லுலோஸ் அடிப்படையிலான மருந்தை தேங்காய் நீரில் இருந்து கண்டுபிடித்ததற்காக பொள்ளாச்சியைச் சேர்ந்த விவேகானந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அமெரிக்காவில் உயர் படிப்புக்குப் பிறகு இந்தியா திரும்பிய அவர், பொள்ளாச்சியில் உள்ள தனது ஆர்டர் பயோமெட் நிறுவனம் மூலம் தென்னை நீரைக் கொண்டு ஒரு மருத்துவப் பொருளை கண்டுபிடித்ததை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கண்டுபிடிப்பானது லட்சக்கணக்கான தென்னை விவசாயிகளுக்கும் பயனளிக்கும். நமது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விவேகானந்தனின் முன்னோடி பங்களிப்பிற்காக சமீபத்தில் ஒரு மதிப்புமிக்க விருதை வழங்கி கௌரவித்தார்.
Heartfelt wishes and appreciation to Thiru Vivekanandan avl from Pollachi, TN, for his innovation in finding bio-cellulose-based medicine from coconut water for treating inflammation caused by diabetes and physical burns.
Happy to know that he returned to India after his… pic.twitter.com/UhWhXOVAlH
மேலும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேற்கொள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து உதவி பெற்றதற்காகவும், இந்திய அரசிடமிருந்து காப்புரிமை ஒப்புதலைப் பெற்றதற்காகவும் அவருக்கு வாழ்த்துகள். அவரது சொந்த ஊரான பொள்ளாச்சியில் விரைவில் உற்பத்தி பிரிவு தொடங்கப்பட உள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது பிரதமர் நோக்கமான விரைவான வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை அழைத்துச் செல்வதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் அனைத்து இளைஞர்களுக்கும் விவேகானந்தன் உத்வேகமாக இருப்பார்.” என பதிவிட்டுள்ளார்.