80 பைக்குகளை 'தனி ஒருவனாக’ ஆட்டை போட்ட கில்லாடி கைது – மடக்கி பிடித்த மதுரை போலீசார்

First Published Dec 4, 2016, 4:39 PM IST
Highlights


மதுரையில் தனி ஒருவனாக இரவு பகலுமாக நோட்மிட்டு பைக்குகளை ஆட்டை போட்ட கில்லாடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80க்கும் மேற்பட்ட பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் எண்ணிக்கை செஞ்சூரியை தாண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் சில மாதங்களாக குறிப்பிட்ட மாடல் பைக்குகள் திருடப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. குறிப்பாக, முக்கிய சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை என அதிக மக்கள் கூடும் இடங்களில் பைக்குகள்திருடப்பட்டன. ரயில் நிலைய வளாகத்தில் 'பார்க்கிங்' இல்லாத இடங்களில் நிறுத்தப்படும் பைக்குகள் அடிக்கடி திருடுபோனதாக ரயில்வே போலீசாருக்கு புகார் வந்தது.

வழக்குப்பதிவு செய்ய தயங்கிய போலீசார், கரிமேடு காவல் நிலையத்துக்கு பாதிக்கப்பட்டோரை அனுப்பி வைத்தனர்.  ஒருகட்டத்தில், கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்தனர். பின்னர், கரிமேடு மற்றும் ரயில்வே போலீசார் ஆலோசனை நடத்தினர்.

இதன்படி, ரயில்வே வளாகத்தில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதை கண்காணித்தபோது, ஒரு நபர் டூவீலரை திருடுவது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, செல்லூர் பாக்கியநாதபுரம் பழனிகுமார் (28) என தெரிந்தது.அவரிடம், போலீசார் முறைப்படி விசாரணையை தொடங்கினர்.

அதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சமயநல்லுாரில் தனது சகோதரர் மனைவியை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர். மேலும், முதலில் 4 பைக்குகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டன. பின்னர், அவரது வீட்டை சோதனையிட்டபோது, ஒரு அறையில் 10க்கு மேற்பட்ட பைக்குகள் 'பதுக்கி' வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், நேற்று வரை 80க்கும் மேற்பட்ட பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதை அறிந்ததும், மதுரை மாநகர் போலீசார் அனைவரும், தங்கள் பகுதியில் திருடுபோன பைக்குகள் உள்ளதா என கரிமேடு காவல் நிலையம் வந்தனர்.

இதுகுறித்துபோலீசார் கூறுகையில், பழனிகுமார், இரவு 3 மணிக்கு மேல் அதிகாலைக்குள் பைக் திருடுவதை வழக்கமாக கொண்டார். திருடியவுடன் நம்பர் பிளேட்டை மாற்றி பொருத்தி, ஏதாவது ஒரு பைக் ஸ்டாண்டில் நிறுத்துவிடுவார். சில வாரங்களுக்கு பின் அந்தபைக்கை எடுத்து கேட்ட விலைக்கு விற்றுள்ளார்.

தவிர, உதிரிபாகங்களையும் கழற்றி விற்றுள்ளார். இவரது வீட்டு பகுதியில் வசிப்பவர்கள் சந்தேகப்பட்டு கேட்டபோது, பழைய டூவீலர்களை வாங்கி விற்கும் தொழில் செய்வதாக கூறியுள்ளார். மேலும், 'பைனான்ஸ்' கட்டாததால் 'பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர். ஆர்.சி. புக்கை ஓரிரு மாதங்களில் தந்துவிடுகிறேன்' என பாதி விலைக்கு விற்றுள்ளார். தற்போது 80 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளோம். இந்த எண்ணிக்கை 100க்கு மேல் கடந்துவிடும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

click me!