மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
அப்துல் கலாமின் மணிமண்டபம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேக்கரும்பு என்னுமிடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அவரின் இந்த மணிமண்டபத்தை, பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மணிமண்டபத்தில், மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம், வீணை இசைப்பது போன்ற சிற்பம் ஒன்றை, பிரதமர் மோடி திறந்து வைத்தார். கலாமின் சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு வைகோ,ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கலாமின் இந்த சிலையின்கீழ் அவரது பேரன் சலீம் பைபிள் மற்றும் குரான் ஆகியவற்றை வைத்தார். இது தொடர்பாக பேசிய சலீம், அப்துல்கலாம், அனைவருக்கும் பொதுவானர் என்றார். எனவே, அவரது சிலைக்குகீழ் பைபிள், பகவத்கீதை, குரான் வைக்கப்பட்டதாகவும் சலீம் விளக்கமளித்தார்.