
கரூர்
அமைப்பு சாரா தொழிலாளருக்கும் கல்வி, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டி ஜனவரி 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாரதிய மஸ்தூர் சங்கம் முடிவு எடுத்துள்ளனர்.
மணல் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஜனவரி 2-ஆம் தேதி அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்டம், வெங்கமேட்டில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு நேற்று நடைப்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு, கரூர் மாவட்டத் தலைவர் ஏ.வி.பன்னீர் செல்வம் தலைமைத் தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் ரவி, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலாளர் சந்தான கிருஷ்ணன் கொடியேற்றி மாநாட்டை தொடக்கி வைத்தார். மகளிர் அணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி குத்துவிளக்கு ஏற்றினார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சிதம்பரசாமி உரையாற்றினார்.
இந்த மாநாட்டில், "மணல் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கக் கூடாது,
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்,
அமைப்பு சாரா தொழிலாளருக்கு வழங்க வேண்டிய கல்வி, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும், இதற்காக ஜனவரி 2-ஆம் தேதி நல வாரியம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் மாநில செயற் குழு உறுப்பினர் வெண்ணிலா, மாவட்ட குழு உறுப்பினர் பரேமஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.