போதைபொருள் விற்பனை... 102 பேரின் வங்கிக் கணக்கு முடக்கம்... மா.சுப்ரமணியன் தகவல்!!

Published : Aug 10, 2022, 06:17 PM IST
போதைபொருள் விற்பனை... 102 பேரின் வங்கிக் கணக்கு முடக்கம்... மா.சுப்ரமணியன் தகவல்!!

சுருக்கம்

போதைப் பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்பவர் குறித்து தகவல் தெரிவிக்க விரைவில் இலவச தொடர்பு எண் அறிவிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

போதைப் பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்பவர் குறித்து தகவல் தெரிவிக்க விரைவில் இலவச தொடர்பு எண் அறிவிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருளை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மலைப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!

ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கஞ்சா பொருட்கள் ஊடுருவியுள்ளது. இதனை தடுப்பதற்கான ஆலோசனையை முதலமைச்சர் மேற்கொண்டார். இளைய சமுதாயத்தினர் பல வகைகளில் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர். நுண்ணறிவு பிரிவை ஏற்படுத்தி போதைப் பொருட்கள் ஊடுருவும் முயற்சிகளை கண்டுபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். வாட்சப் குழுக்களில் புனைப்பெயர் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதை நுண்ணறிவு மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குட்நியூஸ்.. தமிழகத்திற்கு ரூ.4,758 கோடி நிதியை விடுவித்த மத்திய அரசு.. உ.பி.யில் அதிகபட்சம்..!

போதைப் பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்பவர் குறித்து தகவல் தெரிவிக்க விரைவில் இலவச தொடர்பு எண் அறிவிக்கப்படும். போதைபொருள் விற்பனை செய்த 102 பேரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 65 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் 15 கோடி ரூபாய் அளவில் முடக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை செய்பவர் மீது 7 மடங்கு அதிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் பரவலை கட்டுப்படுத்த தவறியதே போதைப்பொருள் அதிகரிக்க காரணம் என்று தெரிவித்துள்ளார்.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 10 December 2025: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..