
கப்பல் வழியாக கள்ளநோட்டுகளை கடத்துவதாக வந்த சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது சென்னை துறைமுகத்திற்கு வரும் அனைத்து லாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் துறை முகத்திலிருந்து லாரிகள் மற்றும் கண்டேய்னர்கள் வெளியே செல்லவும் , வெளியிலிருந்து துறைமுகத்திற்குள் செல்லும் லாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மணி நேரமாக நடந்த சோதனையில், சுங்கத்துறையினர், வருவாய் அதிகாரி புலனாய்வு துறை அதிகாரிகள் என மொத்தம் 5௦ அதிகாரிகளுக்கு மேல் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால்துறைமுக பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . மேலும் தங்கம் உள்ளிட்ட விலையுர்ந்த பொருட்களும் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சந்தேகத்தின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது