இனி 45 நாட்களுக்கு மீன் தட்டுப்பாடு - தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்

Asianet News Tamil  
Published : Apr 15, 2017, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
இனி 45 நாட்களுக்கு மீன் தட்டுப்பாடு  - தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்

சுருக்கம்

ban for fishing 45 days

ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனையொட்டி, வலைகள், படகுகள் பராமரிப்புப் பணிகளில் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு, வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. 

இந்த தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. தடைக்காலத்தையொட்டி, வலைகள், படகுகள் பராமரிப்புப் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ராமநாதபுரம், புதுக்கோட்டை தூத்துகுடி, நாகை, சென்னை உள்ளிட்ட 13 மீன்பிடி மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரத்து 600 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தடைக்காலத்தை 60 நாட்களாக உயர்த்துவது குறித்த திட்டம் பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையில், மீன்பிடி தடை கால நிவாரணம் 5 ஆயிரம் ரூபாயை தடை காலத்திலேயே அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!