மாட்டிறைச்சி தடைக்கு வலுக்கும் போராட்டம் - கோதாவில் குதிக்க ஆயத்தமாகும் திமுக ...!

 
Published : May 29, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
மாட்டிறைச்சி  தடைக்கு வலுக்கும்  போராட்டம் - கோதாவில் குதிக்க ஆயத்தமாகும் திமுக ...!

சுருக்கம்

ban for ban? the day after tomorrow demonstrated in Chennai on behalf of DMK

மாட்டிறைச்சி விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து திமுக சார்பில் நாளை மறுநாள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வது உடனடியாக தடை செய்யப்படுகிறது என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும்.

இனி கசாப்பு தொழிலுக்காகவோ, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடு உள்ளிட்ட விலங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறை மூலம், நாடு முழுவதும் உள்ள மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இச்சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளா, கர்நாடகா, புதுச்சேர் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என அறிவித்துள்ளன.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாட்டிறைச்சிக்கென மாடுகள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடையை எதிர்த்து நாளை மறுநாள்  சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!