
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பால சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி,தற்போது தமிழகத்தின் மேற்கு மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைபெய்ய கூடும் என்றும்,தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாகவே மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,அதிகபட்சமான ஏற்காட்டில் 8 செ. மீ மழை கடந்த வாரம் வெளியான செய்தி குறிப்பில், இரண்டு புயல் உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் புயல் உருவாகவில்லை என்றாலும்,குறிப்பிட்ட தேதியான "12ஆம் தேதி"....அதாவது இன்று தமிழகம் முழுவதுமே மழை பெய்து வருகிறது. ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக,தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வெகுவாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.