முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை; பிறந்து சில மணிநேரங்களிலேயே வீசப்பட்ட கொடூரம்...

Asianet News Tamil  
Published : Jan 30, 2018, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை; பிறந்து சில மணிநேரங்களிலேயே வீசப்பட்ட கொடூரம்...

சுருக்கம்

baby thrown in thornbush horrific thing that was born in a few hours thrown

விழுப்புரம்

விழுப்புரத்தில் பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் ஆண் குழந்தையை முட்பதரில் வீசப்பட்டதை அறிந்த அக்கம்ப்பக்கத்தினர் மீட்டு காவலாளார்களிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், காக்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள முள்புதரிலிருந்து நேற்று இரவு 8 மணியளவில் பச்சிளம் குழந்தை ஒன்றின் அலறல் சத்தம் கேட்டது.

திடிரென குழந்தையின் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மக்கள் அனைவரும் சத்த வந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களேயான ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட காவலாளர்கள், "காகுப்பம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான கதிர்வேல் (எ) குப்புசாமியின் மனைவி காயத்ரிக்கு (33) நேற்று காலை வீட்டிலேயே குழந்தைப் பிறந்தது என்பதையும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இந்தக் குழந்தையை வளர்க்க வசதி இல்லாததால் புதரில் வீசினர்" என்பதையும் கண்டுபிடித்தனர்.

மீட்கப்பட்ட அந்த ஆண் குழந்தையை சைல்டு லைன் உதவியுடன் காவலாளர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக காயத்ரி, கதிர்வேலிடம் காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை