
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை போரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம், நள்ளிரவு பலத்த சூறாவளி காற்று வீசியதால் அங்கு இருந்த வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து உடைந்தன.
பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், அதந்த பகுதியே இருளில் மூழ்கியது. அப்போது அதே பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவற்றின் மேற்கூரையும் காற்றில் பறந்துள்ளது.
இந்த சமயத்தில், அலியின் வீட்டு மேற்கூரை கம்பியில் கட்டப்பட்டு இருந்த தொட்டியில் கிடந்த அவரது பேரன் 3 வயது ஆஷிராவையும் காணவில்லை. அப்போது வீட்டில் அருகே உள்ள சாலையில் குழந்தை அழும் சட்டம் கேட்டது. உடனே அவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது சாலையில் விழுந்து கிடந்த மேற்கூரைக்கு அடியில் குழந்தை அழுது கொண்டிருந்தது.
உடனே அந்த கூரைகளை அப்புறப்படுத்தி குழந்தையை மீட்டனர். பின்னர் காயம் அடைந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.