‘அவசரம் 108’ ஆப்...பினை தொடங்கி வைத்து... 12 ஆம்புலன்ஸ்களை துவக்கி... முதல்வர் எடப்பாடி வேகம்!

 
Published : Nov 02, 2017, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
‘அவசரம் 108’ ஆப்...பினை தொடங்கி வைத்து... 12 ஆம்புலன்ஸ்களை துவக்கி... முதல்வர் எடப்பாடி வேகம்!

சுருக்கம்

avasaram 108 app was inaugurated by tn cm edappadi palanisamy

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் ரூ.3 கோடியே 30 இலட்சம் மதிப்பிலான 22 புதிய ‘108’ அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கும் அடையாளமாக 12 வாகனங்களின் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  மேலும், ரூ. 80 லட்சம் செலவில் அவசரகால ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு கைபேசிகள் வழங்கும் திட்டம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் செயலி ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விபத்துக்களை குறைக்கவும், உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்தல், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தலைக்காய பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவசரகால முதலுதவிக்காக 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 புதிய 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கும் அடையாளமாக, 12 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

108 அவசரகால மைய கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொண்டு விபத்து பற்றி தகவல் தெரிவிக்க ஏதுவாக 5 இலட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் செயலியை (Avasaram 108) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  இன்று துவக்கி வைத்தார்.

இச்செயலி மூலம் அழைப்பவரின் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டு, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்ப உதவும். பொதுமக்கள் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

108 அவசரகால ஊர்திகள், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சென்றடைந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் 75 இலட்சம் ரூபாய் செலவில் 108 அவசரகால ஊர்தி ஓட்டுநர்களுக்கான செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு கைபேசிகளை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 3 ஓட்டுநர்களுக்கு கைபேசிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்த புதிய செயலி மூலம், 108 மையக் கட்டுப்பாட்டு அறையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பெறப்படும் தகவல்கள், அழைப்பவரின் அருகில் உள்ள 108 அவசரகால ஊர்திக்கு பரிமாறப்பட்டு, ஊர்தி ஓட்டுநர் குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவரை சென்றடைய உதவும். 

இரவு நேரங்களில் வழி கூற யாரும் இல்லாத காலங்களில், இந்த செயலி மூலம் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை ஓட்டுநர் அறிந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை சென்றடைய முடியும் ... என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!