அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு தொடங்கியது. சிறந்த வீரர் - சிறந்த காளைகளுக்கு தலா ஒரு கார் பரிசு அளிக்கப்படுகிறது.
அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.
அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
undefined
மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். முதலில் ஜல்லிகட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மருத்துவ பரிசோதனைக்குப்பின் காளைகள் மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் நாட்டாமைக்கு சொந்தமான காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படுகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சிறந்த வீரர் - சிறந்த காளைகளுக்கு தலா ஒரு கார் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறி உள்ளார்.