
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 12 பொது மக்கள் காவல் துறையின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி இருக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் மக்கள் மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான ஒரு வீடியோ பதிவை இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது ஏ.என்.ஐ.
அந்த வீடியோவில் பஸ்-ன் மீது ஏறி நின்று போலீஸ் தனது துப்பாக்கியை சுடுவதற்கு தயார் செய்யும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. அதன் பின்னணியில் ஒருத்தனாவது சாகனும் என கீழிருந்து ஒரு குரல் கேட்கிறது. அதன் பிறகு துப்பாக்கி சுடப்படு சத்தம் கேட்கிறது.
அந்த கலவரத்தின் போது இருந்த பதட்டமான சூழலில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், அந்த காவலர் பேசியிருக்கும் இந்த வார்த்தை மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த வீடியோ மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.