அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்...!!!

 
Published : Aug 02, 2017, 05:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்...!!!

சுருக்கம்

At least 20 people were injured when a government bus was heading towards Theni from Palani.

பழனியில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

பழனியில் இருந்து தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுகொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, வத்தலகுண்டு அருகே சாலைபுதூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.  

இதில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கும் ஆம்புலன்ஸ்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்