சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நிகழ்வு..! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டம்

Published : Apr 17, 2023, 12:38 PM ISTUpdated : Dec 23, 2024, 02:29 PM IST
சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நிகழ்வு..! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டம்

சுருக்கம்

செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டது. அந்த நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்றச் சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் உட்பட அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சைகைமொழிபெயர்ப்பாளர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த குறும்படங்களுக்கும் அரசு விருது.! சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் உறுதி

 

சைகை மொழியில் சட்டப்பேரவை

அதன் தொடர்ச்சியாக, தற்போது நடைபெறும் 2023-24ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் சைகைமொழிபெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்க காணொளி தயாரித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்.அதன்படி, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு. YouTube மூலமாகவும். ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில்,

தொடங்கி வைத்த முதலமைச்சர்

சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வினை மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. மு.அப்பாவு அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி.பொதுப்பணித் துறை அமைச்சர் .எ.வ. வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன். உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகார்கள் கலந்து கொண்டதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

சரிவை நோக்கி செல்லும் கொரோனா பாதிப்பு..! 10 ஆயிரத்துக்கு கீழ் சென்றதால் பொதுமக்கள் நிம்மதி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 10 December 2025: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..