
புதுக்கோட்டை
"நாதியற்ற விவசாயிக்கு விளைவிக்கும் பொருளுக்கு கட்டுப்படியான விலை வேண்டும்" என்று நீதிகேட்டு அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் மேற்கொண்டுள்ள பயணம் புதுக்கோட்டையை வந்தடைந்தது.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்கசண்முகம், "நாதியற்ற விவசாயிக்கு விளைவிக்கும் பொருளுக்கு ஏற்ற கட்டுப்படியான விலை வேண்டும் என்றும் அவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி தலைமை செயலகம் நோக்கி நெடும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 17-ல் ஆரம்பித்த இந்த பயணம் அதன் தொடர்ச்சியாக அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை முடித்துக்கொண்டு நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தத.
கந்தர்வகோட்டையில் அக்கச்சிப்பட்டி, மட்டாங்கால் மற்றும் வீரடிப்பட்டி பகுதிகளில் விவசாயிகளிடம் கொண்டு வந்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்த பயணத்தின் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்கள் சென்று செம்படம்பர் மாத இறுதியில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து மனு கொடுக்க இருக்கிறார்.