
பெரம்பலூர்
பெரம்பலூரில் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான ஆடை, அணிகலன் தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் பெண்களுக்கான ஆடை, அணிகலன் தயாரிப்பு இலவச பயிற்சி கொடுக்கப்படுகிறது.
இந்த பயிற்சி பெற 18 முதல் 35 வயதுக்கு குறைவாகவும், குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 13 நாள்கள் நடைபெறும் பயிற்சியில் அனைத்து விதமான ஆடை, அணிகலன் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும். காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சியில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் மதனகோபாலபுரத்தில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வருகிற வியாழக்கிழமை (அதாவது இன்று) நடைபெறும் நேர்முக, நுழைவு தேர்வில் பங்கேற்கலாம்.
இதில் தேர்வானவர்களுக்கு பயிற்சி நாளை முதல் அளிக்கப்பட உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.