ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: சென்னை திரும்பிய இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: சென்னை திரும்பிய இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Published : Oct 05, 2026, 09:02 PM IST

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பிய இந்திய ஸ்குவாஷ் வீரர்களான ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தங்களின் 7-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று நாட்டிற்குப் பதக்கம் வென்று தந்தது குறித்து ஜோஷ்னா சின்னப்பாவும், தங்களின் வெற்றிப் பயணம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து பிற வீரர்களும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், சர்வதேச அளவிலான பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அளித்து வரும் நிதியுதவி மற்றும் ஊக்கத்திற்கு வீரர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். 2028-ல் நடைபெறவுள்ள லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் பதக்கம் வெல்வதே தங்களின் அடுத்த இலக்கு என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

02:43சென்னையில் பா.ஜ.க தலைவர்கள் அவசர ஆலோசனை: புதிய பொறுப்பாளர் ராம் மாதவ் வருகை
02:43ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் டிவி கே...! எம்.பி. கனிமொழி அதிரடி பேட்டி
03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு