
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி அவர் மருத்துவமனைக்கு வரும் போதே உயிருடன் தான் இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, அப்போது அவர் பேசியது, எல்லாமே உண்மை தான் என நிரூபிக்கும் வகையில், அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஒரு ஆடியோ பதிவு தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் குரல் பதிவு எனக்கூறப்படும் அந்த பதிவை, அவரின் மரணம் குறித்து விசாரித்து வரும், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷனிசம் ஒப்படைத்திருக்கிறது, அப்போலோ மருத்துவமனை. அந்த ஆடியோ பதிவில் ஜெயலலிதா தனக்கு மூச்சுவிடுதலில் இருக்கும் சிரமம் குறித்து கூறியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மருத்துவமனையில் இருந்த போது, தனக்கு எந்த மாதிரியான உணவு வேண்டும் எனும் பட்டியலையும், ஜெயலலிதா தனது கைப்பட எழுதி தந்ததாக, ஒரு பட்டியலையும் சமர்பித்திருக்கின்றது அப்போலோ.