மாறுவேடத்தில் சென்ற போலீசாரிடமே கடத்தல் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு பேரம் பேசிய நபர்.. அப்பறம் என்னாச்சு..?

By Thanalakshmi VFirst Published May 27, 2022, 10:38 AM IST
Highlights

மயிலாடுதுறை மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழமையான 2 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் மாறுவேடத்தில் சென்ற போலீசாரிடம் ரூ. 2 கோடிக்கு பேரம் பேசியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் ஒரு வீட்டில் பழமைவாய்ந்த 2 உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தகவலறிந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சின்னதுரை மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார்  சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதனையடுத்து மாறுவேடத்தில் தயாராக இருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலை பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் அந்த வீட்டிற்கு சென்று அந்த நபரை சந்தித்து சிலை வாங்குவது போல் பேசியுள்ளனர். இதனை நம்பிய அந்த நபர் தான் மறைந்து வைத்திருந்த 2 உலோக சிலைகளுக்கு ரூ.2 கோடி விலை பேரம் பேசியுள்ளார். 

மேலும் படிக்க: தூக்கத்திலேயே வீடு புகுந்து துடிதுடிக்க ரவுடி கொடூரமாக படுகொலை.. போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்.!

அதன்பிறகு, அந்த நபர் சிலைகளை எடுத்து வந்து காண்பித்தவுடன், அவரை போலீஸார் பிடித்து, அவரிடமிருந்த 700 ஆண்டுகள் பழமையான, புத்தமத கடவுள் அவலோகிதரரின் மனைவி தாராதேவி விலை , 300 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை என 2 உலோக சிலைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.போலீஸார் அவரை கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். சிலைகள் இன்று கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
 

மேலும் படிக்க: மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி... சூப்பர் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்...!

click me!