மிக்ஜம் புயல் பாதிப்பு காரணமாக ரயில் தண்டவாளங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் மின்சார ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அரை ணி முதல் ஒரு மணி நேர கால இடைவேளியில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையை சிதைத்த புயல்
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜம் புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. முடிச்சூர், பள்ளிக்கரனை, வேளச்சேரி, மேடவாக்கம் போன்ற பகுதிகளில் வீடுகள் உள்ள பகுதிகளில் 4 முதல் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல இடங்களில் இன்னும் முழுமையாக மின்சார சேவையானது வழங்கபடவில்லை. மேலும் பொபைல் நெட்வொர்க்கும் பாதிக்கப்பட்டுள்ளதால் வெளி உலகம் தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மின்சார ரயில் சேவை ரத்து
இந்தநிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பணி நிமித்தமாகவும் சென்னை மின்சார ரயில்கள் பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் புயல் காரணமாக ரயில் தண்டவாளங்களி்ல் தண்ணீர் அதிகளவு நிரம்பி உள்ளது. மேலும் கூவம் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று மற்றும் நேற்று முன்தினம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இன்றும் ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இருந்த போதும் சூழலைப் பொருத்து புறநகர் மின்சார ரயில் சேவை சிறப்பு ரயில்களாக மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்புப் பாதையில் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில்
இதனிடையே சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு , சென்னை கடற்கரை திருவள்ளூர் அரக்கோணம் , வேளச்சேரி சிந்தாதிரிப்பேட்டை புறநகர் மின்சார ரயில் சேவையானது ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. அரை மணி முதல் ஒரு மணி வரை கால இடைவெளியில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இதையும் படியுங்கள்
சென்னையில் மின் விநியோகம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு இதுதான் காரணம்! அமைச்சர் தங்கம் தென்னரசு !