Annapoorani : அவதாரத்திற்கே ஆப்பா !! என்னை காப்பாத்துங்க.. போலீசிடம் தஞ்சம் புகுந்த அன்னபூரணி அரசு அம்மா !

By Raghupati RFirst Published Dec 29, 2021, 2:11 PM IST
Highlights

கடவுளின் அவதாரம் என்று சமீபத்தில் வைரல் ஆன அன்னபூரணி அரசு அம்மா, இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானோர் விரதம் இருந்து, பாதயாத்திரை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நான் தான் ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி கொள்ளும் பெண்ணின் வீடியோ காட்சிகள் மற்றும் அவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. "ஆதிபராசக்தி அம்மா" என்று அழைக்கப்படும் அந்த பெண்மணி அலங்கார இருக்கையில் அமர்ந்தவாறு அருள் வழங்கும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. 

"பராசக்தி அம்மாவின் திவ்ய தரிசனம் உலக மக்களை காத்து அருள ஆதிபராசக்தி அம்மா அவதாரமாக வந்து விட்டாள்.. வாருங்கள் பக்த கோடிகளே" என்று போஸ்டர் அடித்து விளம்பரமும் செய்து வருகின்றனர்.அன்னபூரணி என்ற பெயர் கொண்ட அந்த பெண்மணி பல ஆண்டுகளாக அருள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இவரிடம் மக்கள் ஆசி பெரும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

செங்கல்பட்டு அருகே நேரு நகர் திருப்போரூர் கூட்டு ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி திடீர் அம்மன் அன்னப்பூரணி அருள்வாக்கு சொல்ல இருப்பதாக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக வாசுகி திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அனுமதி பெற்றிருந்த நிலையில் காவல்துறை சார்பில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவரிடம் ஏதோ பவர் இருப்பதாகவும் அதன் மூலம் மக்களின் நோய்களையும்,கஷ்டங்களையும் குணப்படுத்தி வருவதாகவும் அவரது பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அவர் யார்? எங்கிருந்து வந்தார்?அவர் எப்படி ஆதிபராசக்தியின் அவதாரமாக மாறினார் என்ற விவரங்கள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் அன்னப்பூரணி அம்மா கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெறியாளராக இருந்த அந்த நிகழ்ச்சியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக அன்னப்பூரணி கலந்துகொண்டிருந்தார். அதில் சோக முகத்துடன் அரசு என்பவருடன் ஜோடியாக அமர்ந்துள்ளார் அன்னப்பூரணி. எதிர் வரிசையில் அரசின் மனைவி, அன்னப்பூரணியின் கணவர் ஆகியோர் அமர்ந்துள்ளனர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை இருக்கும் அரசுக்கும், அன்னப்பூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது தனியாக வசிப்பது வரை சென்றுள்ளது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனது கணவனையும்,  தனது 14 வயது பெண் குழந்தையும் அன்னப்பூரணி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு யார் கண்ணிலும் படாமல் வாழ்ந்து வந்த அன்னப்பூரணி தற்போது ஆதிபராசக்தியின் மறு உருவம் என அழைக்கப்பட்டு சாமியாராக வலம் வருகிறார். முகம் முழுவதும் பேசியல், ஐப்ரோ? த்ரெட்னிங் என அலங்கரித்து கழுத்தில் மாலைகள் அணிந்து பக்தர்கள் புடை சூழ அருளாசி வழங்கும் காட்சிகள் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆசி வழங்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக, நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்னப்பூரணி அரசு அம்மா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் மொபைல் போன் மூலமாகவும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் தனக்கும், தன் பக்தர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, தன்னை ஆன்மிக பணியில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து சிலர் மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து வரும் மிரட்டல்கள் காரணமாக, தனது ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, உடனடியாக தனக்கும், தனது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

click me!