தமிழக பாஜகவின் முதல் எம்.எல்.ஏ. காலமானார்: அண்ணாமலை இரங்கல்!

By Manikanda PrabuFirst Published May 8, 2024, 11:24 AM IST
Highlights

தமிழக பாஜகவின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவுக்கு மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்

தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதன் காலமானார். அவருக்கு வயது 74. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு மே 9ஆம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜகவின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவுக்கு மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா.வேலாயுதன் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 

 

தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.C.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின்… pic.twitter.com/xcAgXYoQBa

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k)

 

கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா வேலாயுதனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.” என கூறப்பட்டுள்ளது.

ஹரியானாவில் கவிழும் நிலையில் பாஜக அரசு: ஆதரவை வாபஸ் வாங்கிய சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்!

பாஜகவை சேர்ந்தவரான சி.வேலாயுதம், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுர சட்டமன்ற தொகுதியில் இருந்து 1996ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றார்.

தமிழகத்தின் முதல் பாஜக வெற்றி வேட்பாளர் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் பாஜக சார்பில் முதன்முறையாக வெற்றி பெற்றவரும் இவரே. கன்னியாகுமரி பகுதி மக்களிடம் இவர் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான ஆதரவு கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!