புதிய அறிவிப்பு...! அண்ணா நூற்றாண்டு அரங்கு வாடகைக்கு...! ஒரு நாள் கட்டணம் ரூ 2.31 லட்சம்..!

Published : Dec 05, 2018, 07:10 PM IST
புதிய அறிவிப்பு...! அண்ணா நூற்றாண்டு அரங்கு வாடகைக்கு...! ஒரு நாள் கட்டணம் ரூ 2.31 லட்சம்..!

சுருக்கம்

ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் முதன்மையானதாக உள்ளது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டு உள்ளது.

இந்த நூலகமானது, தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அவராலேயே திறந்து வைக்கப்பட்டது. 

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாக செயல்படுகிறது. முதல் தளத்தில் 15,000 சதுர அடி பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் தற்போது 1,280 பேர் அமரக்கூடிய அரங்கு வாடகைக்கு விடப்படும் என பொது நூலக இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரங்கின் ஒரு நாள் கட்டணம் ரூ 2.31 லட்சம் என்றும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு 60% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறுவித்து உள்ளார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், சிறப்பு அமசமாக உலக இணைய மின் நூலகம் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அவராலேயே திறந்து வைக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!