ஒரே வாரத்தில் 40 தமிழக மீனவர்கள் கைது... இதற்கு நிரந்தர தீர்வே இல்லையா.? சீறும் அன்புமணி

By Ajmal KhanFirst Published Jan 23, 2024, 1:46 PM IST
Highlights

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில், தற்போது இராமேஸ்வரம்  மீனவர்கள்  6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த்து தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற  இராமேஸ்வரம்  மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.  தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 3 நிகழ்வுகளில் 40 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Latest Videos

மீனவர்களை உடனே விடுவிக்கனும்

இந்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆணை கூட இன்னும் பிறப்பிக்கப்படாத நிலையில் அடுத்தக்கட்டமாக மேலும் 6 மீனவர்களை இலங்கைப் படைகள் கைது செய்துள்ளன. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்நிகழ்வாகி விட்டன.

இலங்கைப் படையினரின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக  தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

click me!