பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!

Published : Dec 09, 2025, 03:36 PM IST
Anbumani Ramadoss vs MK Stalin

சுருக்கம்

பாமக பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ராமதாசை சுற்றிலும் துரோகிகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் தேர்தல் ஆணையம் சென்று இப்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கட்சிக்கு உரிமை கோரி இருவரும் தேர்தல் ஆணையம் சென்ற நிலையில், பாமகவின் தலைவர் அன்புமனியே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றம் சென்றபோது, உரிமையியல் நீதிமன்றத்தை நாட நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ராமதாஸால் வெற்றி பெற முடியாது

இதன்பின்பு ''அன்புமணி தேர்தல் ஆணையத்திடம் பொய் சொல்லி இருக்கிறார். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி நீதிமன்றத்தை அவமதித்த அன்புமணியை ஜெயிலில் அடைக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தரப்பு தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுத்த அன்புமணி தரப்பு, ''எங்கள் பக்கம் நியாயம், ஆதாரம் உள்ளது. எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸால் வெற்றி பெற முடியாது'' என்று சவால் விட்டது.

திமுக தான் காரணம்

இந்த நிலையில், பாமகவில் நீடிக்கும் பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ''பாமகவில் நீடித்து வரும் குழப்பத்திற்கு திமுக தான் காரணம். பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது. தைலாபுரமே திமுகவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பாமகவை களத்தில் நேரடியாக சந்திக்கும் தைரியம் திமுகவுக்கு இல்லை.

நான் மன்னிக்க மாட்டேன்

ஆகவே குழப்பத்தை ஏற்படுத்தி பாமகவில் பிரச்சனை ஏற்படுத்த பார்க்கிறது. ஐயா ராமசாஸை சுற்றி திமுகவின் கைக்கூலிகளும், தீய சக்திகளும் உள்ளனர். ராமதாசுக்காக எவ்வளவோ அசிங்கங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டுள்ளேன். இந்த துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன். யாரெல்லாம் ஜெயிலுக்கு போகிறார்கள் என்று பார்க்க போகிறீர்கள்'' என்று தெரிவித்தார்.

டெல்லி போராட்டத்தில் 30 பேர் கூட இல்லை

''துரோகிகள் சொல்வதைத்தான் ராமதாஸ் நம்புகிறார். டெல்லி அவர்கள் நடத்திய போராட்டத்தில் 30 பேர் கூட கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஐயாவிடம் 3,000 பேர் கலந்து கொண்டதாக பொய் சொல்லி இருக்கிறார்கள்'' என்றும் அன்புமணி கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்ன கோபி இதெல்லாம்.. புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லையா.? விஜய்யின் பேச்சால் எழுந்த சர்ச்சை
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?