தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்..! எந்த எந்த இடங்கள் என தெரியுமா..? நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Published : Dec 16, 2022, 11:13 AM IST
தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்..! எந்த எந்த இடங்கள் என தெரியுமா..? நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சுருக்கம்

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் 115 கோடி மதிப்பீட்டில் அமைக்க இருப்பதாகவும் அதற்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  

10 புதிய பேருந்து நிலையங்கள்

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக பேருந்துகள் வாங்குவதும் நான்கு வழிச்சாலை திட்டத்தை 8 வழிச்சாலையாக மாற்றும் நடவடிக்கையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவகையில் ஊருக்குள் இருக்கும் பேருந்து நிலையங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தங்கள் தொகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை சட்டமன்ற் உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பியிருந்தனர். அப்போதே புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமதிப்பீடு வெளியிடப்படும் என கூறப்பட்டது.

ஒபிஎஸ் அணியில் விழுந்தது அடுத்த விக்கெட்... ஈபிஎஸ் உடன் இணைந்த ஒபிஎஸ் ஆதரவாளர்!!

ரூ.115 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு

இந்தநிலையில் தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க 115 கோடி ரூபாய்  ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் இரண்டு மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் படி திரூப்பூரில் ரூ.26 கோடி  மற்றும் ஒசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஆவின் நெய் ஒரு லிட்டருக்கு ரூ 50 உயர்வு..! 9 மாதத்தில் 3வது முறையாக விலை அதிகரிப்பு- அதிர்ச்சியில் பொதுமக்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!
எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி