பாஜக ஆட்சிக்கு பூஜ்ஜியத்துக்கு கீழ் மதிப்பெண் கொடுத்த ராமதாஸ்.. வைரலாகும் பழைய வீடியோ

By Ajmal KhanFirst Published Mar 19, 2024, 1:50 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்த நிலையில், பாஜகவிற்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுத்த ராமதாசின் பழைய வீடியோ வைரலாகி வருகிறது. 

பாஜக கூட்டணியில் பாமக

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, நாட்டின் நலன் கருதி, மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகத்தில் மாற்றங்கள் வர பாமக முடிவு எடுத்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது. எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என கூறினார். 

பாஜகவிற்கு சைபருக்கு கீழ் மதிப்பெண்

இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சி தொடர்பாக பேட்டியளித்துள்ளார். அதில், பாஜகவிற்கு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்றால் சைபருக்கு கீழே ஒன்றுமில்லை சைபருக்கு கீழே ஏதாவது இருந்தால் பாஜகவிற்கு கொடுக்கலாம் என கூறுகிறார். மேலும் இந்திய மக்களுக்கு தமிழக மக்களுக்கு பாஜக என்ன செய்தார்கள்.? மாநிலத்தின் உரிமைகளை பறித்துக் கொண்டு உள்ளார்கள். பாஜகவின் நோக்கமே இந்தி திணிப்பது இந்துத்துவா கொள்கை மட்டுமே.  இந்தி, இந்துத்துவா, இந்தியா இதுதான் பாஜக கொள்கை. 

பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்

பூஜ்ஜியத்திற்கு கீழே பாஜகவிற்கு மதிப்பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். எனவே அந்தக் கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.  பாஜகவுடன் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு 100க்கு 200 சதவீதம் கூட்டணி வைக்காது என தெரிவித்தார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

இதையும் படியுங்கள்

பாமக பாஜக எனும் மூழ்கும் கப்பலில் ஏறியிருக்கிறது - செல்வப்பெருந்தகை விமர்சனம்

click me!