விவசாயி ஒருவர் மர்ம மரணம் - வன ஊழியரை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்...!

 
Published : Oct 26, 2017, 07:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
விவசாயி ஒருவர் மர்ம மரணம் - வன ஊழியரை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்...!

சுருக்கம்

An angry farmer was killed by a villager in the Thiruvannamalai district of Chengam near the temple.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மணல் அள்ளிய விவசாயி ஒருவர் உயிரிழந்ததிற்கு வன ஊழியரே காரணம் என கூறி கிராம மக்கள் அவரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு நிலவுகிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சந்தகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மணல் அள்ள வந்த திருமலை என்ற விவசாயி புழுதியூர் கிராமத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

அப்போது அங்கு வந்த கிராம மக்கள் திருமலையின் உயிரிழப்புக்கு வன ஊழியர் தாண்டவராயனே காரணம் என கூறி அவரை சரமாரியாக தாக்கினர். இதில் தாண்டவராயன் படுகாயமடைந்தார். 

தகவலறிந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் இருந்து அவரை மீட்டு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் கிராம மக்களும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இறந்தவரின் உடலை எடுத்து செல்லவும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 
 

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு