கடலில் உருவானது புதிய “சுழல்காற்று”....! பதற்றத்தில் திருவொற்றியூர் மக்கள்..!

First Published Oct 26, 2017, 7:11 PM IST
Highlights
there is a new cyclone in bay of bengal thiruvotriyur


திருவொற்றியூர் கடற்பகுதியில் “சுழல்காற்று”

தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது  வாடா கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் மேலும் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று திருவொற்றியூர் கடற்பகுதியில் வித்தியாசமான “சுழல்காற்று” ஏற்பட்டு உள்ளது. கடற்பகுதியில் கண்ணனுக்கு எட்டிய  தூரத்தில் ஆங்காங்கு சுழற்காற்று  வீசியதால் மக்கள்  பெரிதும்  பதற்றம்  அடைந்துள்ளனர்.

காரணம் ஏற்கனவே சுனாமி,வர்தா புயல் உள்ளிட்ட காரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் தமிழக மக்கள்.குறிப்பாக கடகரையோர  சென்னை வாசிகள்...

இந்நிலையில் இந்த சுழற்காற்று காரணமாக மக்கள் பெரிதும் பதற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,ஈரப்பதம் அதிகமுள்ள கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்துள்ளது

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை பல  இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் 

கடந்த 24  நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8 cm, பரங்கிபேட்டையில் 4 cm மழையும் பெய்துள்ளது

சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும் என்றும்,வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது 

 

 

 

 

click me!