பொதுமக்களுக்கு முக்கிய தகவல்.. தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் 8 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது.!

By vinoth kumar  |  First Published Sep 23, 2022, 6:32 AM IST

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. 


பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர்,  பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் எவை என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

பெரம்பூர்

பெரியார் நகர்- முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது தெரு, சந்திரசேகரன் சாலை, கந்தசாமி சாலை.

பொன்னேரி

ராமசந்திரபுரம், மாதர்பாக்கம், கொண்ட மாநெல்லூர், மாநெல்லூர், பண்ணுர், பாதிலிவேடு, செதில்பாக்கம், நாயுடு குப்பம், போந்தவாக்கம், ஈகுவார்பாளையம், என்.எஸ். நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் 

ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று மின்தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று மின்தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!